இலங்கையில் நீரிழிவு நோயின் விகிதம் அதிகரிப்பு

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamilnews #Hospital
Prathees
2 years ago
இலங்கையில்  நீரிழிவு நோயின்  விகிதம் அதிகரிப்பு

இலங்கையின் ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட தேசிய ஆய்வில், ஆசியாவிலேயே இலங்கையிலேயே நீரிழிவு நோயின் அதிக விகிதம் இருப்பதாகவும், வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுகாதார கொள்கைக்கான நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் 2019 இல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

லண்டனை தளமாகக் கொண்ட பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னல் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, இலங்கையில் உள்ள பெரியவர்களில் நான்கில் ஒருவருக்கு  நீரிழிவு நோய் இருப்பதாகவும், மூன்றில் ஒருவருக்கு உயர் சர்க்கரை அளவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

புவியியல் ரீதியாக, அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு பாதிப்புக்கள் இலங்கையின் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன, மூன்றில் ஒன்று கொழும்பில் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளும் அதிக எண்ணிக்கை பதிவுக்குள் வருகின்றன.

இந்த கண்டுபிடிப்புகளை கொண்டு ஆசியாவிலேயே சர்க்கரை நோயின் அதிக விகிதத்தைக் கொண்ட நாடாக இலங்கை உருவாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!