ஹோமாகமவில் பிக்குகளின் போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்
#Protest
#Colombo
#Police
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

ஹோமாகம, பிடிபன சந்தியில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் பேரவையின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை அனைத்து மாணவர்களுக்கும் திறந்து விடுமாறு கோரி பிக்குகள் குழு இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
பிடிபன சந்தியில் சத்தியாக்கிரகத்தை மேற்கொள்வதற்காக தற்காலிக மாடமொன்றை நிர்மாணிக்கும் பணியின் போது பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் சூடான சூழ்நிலையும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அந்த இடத்தில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர்.



