தமிழ் அரசியல் கைதிகள் 21 பேர் அனைத்து வழக்குகளிலிருந்து முழுமையாக விடுவிப்பு

#Court Order #release #Colombo #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
 தமிழ் அரசியல் கைதிகள் 21 பேர் அனைத்து வழக்குகளிலிருந்து முழுமையாக விடுவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பிணை வழங்கப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் அனைத்து வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

4 பெண்கள் உள்ளிட்ட 21 பேரும்  இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இது தொடர்பான விசாரணைகள் நேற்று இடம்பெற்றது.

இந்த  நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தி, 2014ம் ஆண்டு  கைது செய்யப்பட்ட அவர்கள், வவுனியா, கிளிநொச்சி மற்றும் பூசா முகாம் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல நிபந்தனைகளின் அடிப்படையில் 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த 21 பேரும் எவ்வித நிபந்தனைகளுமின்றி அவர்களது சகல வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!