யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட விபரீதம்: வைத்தியசாலைகளில் சிகிச்சை

#SriLanka #Jaffna #Hospital #Health #Healthy #Eye #Lanka4
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில்  ஏற்பட்ட விபரீதம்: வைத்தியசாலைகளில் சிகிச்சை

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுமார் ஐம்பது பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
 சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இசை நிகழ்சியில் லேசர் கதிரொளிகள், புகைகள் (ஸ்மோக்) போன்றவை அளவுக்கு அதிகமாக பாவிக்கப்பட்டமையாலையே நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கண் எரிவு, கண் வீக்கம், தொடர்ச்சியாக கண்ணீர் வருதல் போன்ற பாதிப்புக்களுக்கு உள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!