உலகத்தாய் மொழி நாளினை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை எற்பாட்டில் உலகத் தாய்மொழி நாள் நிகழ்வுகள் இன்று - படங்கள் இணைப்பு
#SriLanka
#sri lanka tamil news
#Tamil
#Tamil People
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

உலகலாவிய ரீதியாக கொண்டாடப்படும் உலகத்தாய் மொழி நாளினை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை எற்பாட்டில் உலகத் தாய்மொழி நாள் நிகழ்வுகள் இன்று, கோப்பாய் கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பேராதனை பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வ. மகேஸ்வரன் கலந்து கொண்டு மொழி கற்றலின் அவசியம் குறித்து பேருரை ஆற்றினார்.

நிகழ்வில் விரிவுரையாளர் வே சேந்தன் பேருரைக்கான அறிமுக உரையையாற்றினார். உலகத் தாய்மொழி நாள் தொடர்பாக ஆசிரிய மாணவர்களின் உரை, கவிதை மற்றும் பாடல்கள் என்பனவும் ஆற்றுகை செய்யப்பட்டன.

இதில் கலாசாலை ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



