முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன

#SriLanka #Parliament #President #Ranil wickremesinghe #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன

இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வரவேண்டுமானால், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன இன்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் வர்த்தக சமூகத்தின் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

வர்த்தகர் தினேஸ் ஷாப்டரின் மரணம் தொடர்பில்;, நாட்டில் தொடர்ந்தும் முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகி;ன்றன.

முன்னதாக ஷாப்டரின் மரணம் கழுத்து நெரிக்கப்பட்டு மேற்கொள்;ளப்பட்டது என்று சட்டவைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.

எனினும் அதே சட்டவைத்திய அதிகாரி, தமது இரண்டாவது அறிக்கையில் தினேஷ் ஷாப்டரின் மரணம், தற்கொலையாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு சட்டவைத்திய அறிக்கைகளையும் வெளியிட்ட சட்டவைத்திய அதிகாரி, ஏற்கனவே சேவையில் இருந்து தடை செய்யப்பட்டவர் என்று இலங்கை வைத்திய சேவை சங்கம் தெரிவித்துள்ளதாக எரான் விக்கிரமரட்ன குறிப்பிட்டார்.

இந்தநிலையில் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயத்தில் தலையிட்டு நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று எரான் விக்ரமரட்ன தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!