மீளக்குடியமர்ந்த மக்களுக்காக சர்வதேச நாடுகளிடம் உதவி கோரிய யாழ் அரசாங்க அதிபர்!

யாழ். வலி. வடக்கில் மீள்குடியிருக்கும் மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளுமாறு மேற்குலக சர்வதேச நாடுகளிடம் இருந்து உதவிகளை கேட்டிருக்கின்றோம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
வலி. வடக்கில் மீள்குடியேறியுள்ள மக்களின் தற்போதைய நிலைமைகள் பற்றிய தெளிவுபடுத்தும் ஊடகவியாளர்கள் சந்திப்பு நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் செயற்பாட்டில் சிறிது சிறிதாக மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டாலும் மாவட்ட செயலகத்திற்கு சில இடர்பாடுகள் இருக்கின்றது.
முகாம்களில் இருக்கின்றவர்களை தற்போது குடியேற்றம் செய்துவருகின்றோம். சொந்த காணிகளுக்கு உரியவர்கள் இன்னும் முழுமையாக கையேற்று உரிய பாவவைக்கு உட்படுத்தினால் தான் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு எங்களுக்கு வசதியாக இருக்கும். அந்த காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிச் செல்லுகின்ற போது அங்கு இருந்த கட்டிடங்களை விட்டு சென்றுகின்றனர் .
காணியின் உரியவர்கள் அங்கு போகாத காரணத்தினால் இராணுத்தினரால் நீக்கப்பட்ட தன் காரணமாக அப்போது பிரச்சனை, இப்போது இல்லை. சட்டவிரோதமான செயல்கள் இடம்பெறுவதாகவும் அதில் உள்ள பெறுமதியான பொருட்கள் களவாடப்படுவதாகவம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுவிக்கவிட்ட காணிகளை வந்து பார்த்துட்டு போவதை விடுத்து காணி முறையாக பயன்படுத்துவது தங்களுடைய உடமைகளை உரிமைகோருவதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வந்தால் தான் தொடர்ந்து செயல்பாடுகளை முன்னெடுக்கமுடியும்..
மீள்குடியேறியவர்களுக்கு முப்பத்தெட்டாயிரம் ரூபா பணமும் (38000) வழங்கப்படும். அதற்கான நிதியும் கிடைக்கபெற்றுள்ளது. மேற்குல சர்வதேச நாடுகளிடம் இருந்து உதவிகளை கேட்டிருக்கின்றோம் - என்றார்.



