இலங்கையின் சில பகுதிகளில் இன்று நிலநடுக்கம்!
#SriLanka
#Earthquake
#School
#School Student
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

இன்று 22ஆம் திகதி முற்பகல் 11.47 மணியளவில் புத்தலையைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சுமார் ஒரு நிமிடம் நிலம் அதிர்ந்ததாகவும், மயில்கள் உள்ளிட்ட பறவைகள் அலறியதாகவும் அருகில் உள்ள கிராம மக்கள் கூறுகின்றனர்.
ஹந்தபானகல, புத்தல, வெல்லவாய உள்ளிட்ட பல பிரதேசங்கள் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் அறியப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் பாடசாலை மாணவர்கள் விளையாட்டு மைதானங்களுக்கு அனுப்பப்பட்டதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் குலுங்குவதை பலமாக உணர்ந்தனர்.



