வர்த்தமானியின் பிரகாரம் முட்டைக்கான அதிகூடிய விலை நிர்ணயம்
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#prices
#Egg
#Tamil
#Tamilnews
#Tamil People
Prabha Praneetha
2 years ago

நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் முட்டைக்கான அதிகூடிய விலை 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 46 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, முட்டைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் முட்டை வர்த்தகத்தில் இலாபம் ஈட்ட முடியாத காரணத்தினால் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பதாக அகில இலங்கை கறிக்கோழி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வாக முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



