மருந்துகளை அரிசி மா சீனி போன்று இறக்குமதி செய்ய முடியாது: வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர்

#SriLanka #Medical #Medicine #Health #World_Health_Organization #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
மருந்துகளை அரிசி மா சீனி போன்று இறக்குமதி செய்ய முடியாது: வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர்

மருந்துகளை அரிசி மா சீனி போன்று இறக்குமதி செய்ய முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் மருந்துகளை இறக்குமதி செய்வதாக இருந்தால், மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் முறையான அனுமதியுடன் மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியும் எனவும், அவ்வாறான அனுமதியின்றி எந்த மருந்தையும் இறக்குமதி செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்ட மக்களின் உயிர்களுக்கு வலுவான பொறுப்புடன் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அரிசி, மா மற்றும் சீனி போன்று மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாது என்றும், அதற்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலை உள்ளது என்றும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!