தொடர்பாடல் திணைக்களத்தினால் பாரிய பிரச்சினை: ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவர் பதவியை தமக்கு வழங்க தெரிவுக்குழு தெளிவாக தீர்மானித்த போதிலும், அதன் தொடர்பாடல் திணைக்களத்தினால் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொடர்பாடல் திணைக்களம் தம்மை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்த
உறுப்பினர், இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரிடம் இன்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
என்றும் கூறினார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது சபையில் நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா இருந்தார்.
பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக ஹர்ஷ டி சில்வா அந்தப் பதவியை இழந்தார்.



