பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்
#Negombo
#Police
#Student
#Lanka4
#sri lanka tamil news
#SriLanka
Prathees
2 years ago

கொச்சிக்கடை பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
தோப்புவ பாலத்தில் இருந்து மா ஓயாவில் குதித்த பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மாணவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவர் அகரகம மடம்பெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடையவர் என மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கையடக்கத் தொலைபேசியை சேதப்படுத்திய சம்பவமொன்றுக்கு பணம் செலுத்தப் போவதாக வீட்டாருக்கு அறிவித்து விட்டுச் சென்ற மாணவன் நீரில் குதித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன மாணவனைக் கண்டுபிடிப்பதற்காக கடற்படையின் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



