பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் மீது லேசர் தாக்குதல் நடத்திய சீனா!

#world_news #China #Attack #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
பிலிப்பைன்ஸ்  கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் மீது லேசர் தாக்குதல் நடத்திய சீனா!

பிலிப்பைன்ஸ்  கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் மீது சீனா கடலோர காவல்படை கப்பலில் இருந்து லேசர் கதிர் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  

இதனால் தென் சீனக் கடலில்  பணியாளர்களின் கண்கள் சில மணிநேரம் பார்வை இழந்துள்ளனர். சீனாவின் இந்த மிரட்டல் சம்பவத்துக்கு பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 சீன கடலோர காவல்படை கப்பல்  137 மீட்டர் தொலைவில் வந்ததாகவும், அதன் மாலுமிகள் கப்பலில் இருந்து பச்சை நிற லேசர் கற்றை தாக்கியுள்ளனர். 

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு சீனா பதில் அளிக்கவில்லை. இந்த சம்பவம் பிப்ரவரி 6-ம் தேதி தென் சீனக் கடலில் உள்ள நான்சா தீவுகளுக்கு அருகே நடந்துள்ளது. இதனை பிலிப்பைன்ஸ் படையினர்   இன்று வெளியிட்டுள்ளனர்.

 பிலிப்பைன்ஸ் பணியாளர்களிடையே லேசர்களைப் பயன்படுத்தி உடல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவது இதுவே முதல்முறை என்று பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் கொமடோர் அர்மண்ட் பாலிலோ அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

2022ல் மட்டும் சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் கிட்டத்தட்ட 200 இராஜதந்திர எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது.

 சீனா தென்சீனக் கடலை முழுவதுமாக உரிமை கோருகிறது, மற்ற உரிமைகோருபவர்களுடன் அதை மோத வைக்கிறது.  பெய்ஜிங்கில் ஜனவரி மாதம் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்த முன்னாள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே    பெய்ஜிங்கிற்கு நட்புரீதியாக கருத்து தெரிவித்த போதிலும், பதட்டங்கள் நீடித்தன, 

இதேவேளை தென் சீனாகடலில்  சீனாவின்  அத்துமீறல்களை தடுக்க தற்போது பிலிப்பைன்ஸுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நெருக்கமான இராணுவ கூட்டணியை உருவாக்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!