வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது இடைநிறுத்தம்!
#SriLanka
#Sri Lanka President
#Passport
#Airport
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குடிவரவுத் திணைக்களத்தின் இணைய முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதனை சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, ஒருநாள் சேவையின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் ஊடாக அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



