சந்தேகத்திற்கிடமான மற்றொரு பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

அமெரிக்கா தனது வான்வெளிக்கு அருகில் பறந்து சென்ற அடையாளம் தெரியாத மற்றொரு பொருளை சுட்டு வீழ்த்தியுள்ளது.
ஜனாதிபதி ஜோ பிடனின் உத்தரவின்படி, கனேடிய எல்லைக்கு அருகிலுள்ள ஹூரான் ஏரிக்கு மேலே வானத்தில் அடையாளம் தெரியாத பொருளை அமெரிக்க F-16 போர் விமானங்கள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 20,000 அடி உயரத்தில் காற்றில் பறக்கும் போது அடையாளம் தெரியாத பொருள் சுடப்பட்டதாகவும் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.
உளவு பார்க்க சீனா பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பலூனை அமெரிக்க பாதுகாப்பு படையினர் பிப்ரவரி 4 ஆம் தேதி சுட்டு வீழ்த்தினர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பிறகு அமெரிக்க பிராந்தியத்தில் பறந்து கொண்டிருந்த போது சுட்டு வீழ்த்தப்பட்ட 4வது விண்கலம் இது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா தனது வான்வெளிக்கு அருகில் பறந்து சென்ற அடையாளம் தெரியாத மற்றொரு பொருளை சுட்டு வீழ்த்தியுள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின்படி, கனேடிய எல்லைக்கு அருகிலுள்ள ஹூரான் ஏரிக்கு மேலே வானத்தில் அடையாளம் தெரியாத பொருளை அமெரிக்க F-16 போர் விமானங்கள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.