யாழ் தேர்தலில் வெற்றிபெறப்போவது யார்? ஏன்?

நாம் நடந்துவந்த கால இடுக்கில் அதுவும் போர் முடிந்த பின்னர் தேர்தலில் புலிகளின் அனுதாபத்தோடு புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது.
இருப்பினும் புலிகள் இருக்கும்பொழுது பெற்ற வெற்றியை மக்கள் கொடுக்கவில்லை. அதற்க்கு பல காரணங்கள் இருந்ததாக சில புலிகளின் ஆதரவான அரசியல்வாதி கூறினார்.
அது ஒரு புறம் இருக்க,
அடுத்து அதே கூட்டமைப்புக்குள் பிளவு மற்றும் மற்றைய சில தமிழ் கட்சிகளின் அரச ஆதரவு என வாக்குகள் உடைந்தது. அடுத்தடுத்த தேர்தலிலே ஒவ்வொரு கிளைக் கட்சிகளுக்குள்ளும் குத்துப்பாடு பிளவுகள் ஏற்ப்பட்டது.
போகப்போக தெரிந்தோ தெரியாமலோ ஆழும் பெரும்பான்மை இனத் தலைமை கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவதுபோல தமிழ் கட்சிகள் உடைந்து வாக்குகளை மண்பாண்ட உண்டியலை நடு வீதியில் உடைத்ததுபோல வாக்குக்கள் சிதறிப் போயின அதை மக்களுக்கு வேண்டாதவர்களும் நடக்க முடியாத ஜெதார்த்தம் இல்லாத தேர்தல் எழிர்ச்சி உரையால் மக்களின் தலை முடியை கொட்ட வைத்து மொட்டையாக ஆக்கி விட்டனர்.
இப்படியே மக்களை பற்றியோ நாட்டைப் பற்றியோ கவலை இல்லாத தமிழ் தரப்புக்கள் தமது தேவைக்கு ஏற்றார்போல மக்களை கொள்கைகளை மாற்ற வைக்க பாடுகிறனர்.
நேற்றைய எதிரி. நேற்று தவறான கொள்கை இவற்றை இன்று ஆதரிக்கின்றன.
இதனால் மக்கள் யாரை தமிழ் பிரதிநிதியாக நம்பலாம் என்ற ஐய்யப்பாட்டில் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில் மக்கள் தேடுவது தமக்கும் தமது வருமானத்துக்கும் உதவியாக யார் இருக்குறார்களோ அவர்களை.
என்னை வெல்ல வையுங்கள் நான் வென்றால் உங்களுக்கு நல்ல சேவை செய்வேன் என கூறுகிறவர்களை விட தமக்கு உதவிக்கொண்டிருக்கும் யாரோ ஒரு கொடை வள்ளலை தாம் வெல்ல வைத்தால் தமக்கு கிடைக்கும் உதவி பல மடங்கு ஆகும் என்ற சரியான தெளிவோடு மக்கள் இருக்கிறார்கள்.
எனவேதான் யாழ் மக்களின் வற்புறுத்தலின் பெயரில் யாழ்ப்பாணம் மட்டுமல்ல. கிளக்கு மாகாணம். மலையகம் இந்தியா என உலகளாவிய ரீதியில் தானதொன்டன், கொடைவள்ளல், எழிமையான தோற்றம். ஏழைகளிக்காகவே பிறந்தவன், பலரை வாழவைத்த வாழ வைத்துக்கொண்டிருக்கும் தியாகி என அன்பாகவும் மரியாதையாகவும் அழைக்கப்படும் வாமதேவா தியாகேந்திரன் அவர்களை யாழ் மக்கள் இணைந்து தேர்தலில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த செய்தி பல குழப்பவாத கொள்கை கட்சிகளுக்கு வயிற்றில் புளி வார்த்திருக்கிறது.
எது எப்படியோ அரசியல் என்றால் மக்கள் தொண்டு. அதை மாற்றி மக்களை அரசியல்வாதிகள் செம்மரியாட்டுக்கூட்டமாக நினைப்பதால் மக்கள் விழித்துள்ளனர். இம்முறை யாழ் மக்களுக்கு ஒரு அரசியல் தொன்டன் கிடைத்துள்ளான். இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டால் யாழ் மக்களுக்கு விமோசனம் கிடையாது.
இது யாழ் மாவட்டத்தில் மட்டுமல்ல அகில இலங்கையிலும் மாறவேண்டும். இப்படியான சேவையை தமது பணத்தில் செய்பவர்களே அனைத்து மாவட்டங்களுக்கும் தேவை.
மக்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்கள் விடிவை நீங்களே முடிவு செய்யுங்கள். நாமும் உங்கள் பக்கம். எமது லங்கா4.கொம் எப்பொழுதும் தியாகியை போன்றவர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் உறுதுணையாகவே இருக்கும் என உறுதிமொழி செய்கிறோம்.
‘மனித நேயத்தை காப்போம்
மனிதனாக வாழ்வோம்’
-செய்தி ஆக்கம்-
-SHELVA SWISS-





