பணமோசடி செய்து 46 பிடியாணைகளில் தலைமறைவாகியிருந்த பெண்ணொருவர் கைது
#Court Order
#Arrest
#Police
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து நீதிமன்றத்தின் 46 பிடியாணைகளில் தலைமறைவாகி தப்பிச் சென்ற பெண்ணொருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நுகேகொட - நாவல பிரதேசத்தில் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த கடவட - சூரியகம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உணவு பொருட்களை மொத்தமாக இறக்குமதி செய்து, வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி உள்ளார்.
அது தொடர்பாக அவர் மீதான 46 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகள் அனைத்திலும் அவர் ஆஜராகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடவட - கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில், பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.