சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் பொலிஸாரால் கைது!
#SriLanka
#Sri Lanka President
#Arrest
#Police
#Protest
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை நடைபெறும் புதிய பாராளுமன்ற அமர்விற்கு சென்ற வேளை பாராளுமன்ற நுழைவாயிலை மறித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாராளுமன்றத்திற்கு அருகில் பாராமன்ற உறுப்பினர்கள் வரும் வழியை மறுத்து அவர் அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (08) பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கரத்தினர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.



