அதிகளவான பெறுமதியான தங்கம் காணாமல்போன சம்பவம்: கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் இலிகிதர் கைது
#SriLanka
#Sri Lanka President
#Court Order
#Arrest
#Police
#Colombo
#Lanka4
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு அறையின் பாதுகாவலராக இருந்த நீதிமன்ற இலிகிதர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற பிரதான வழக்கு அறையில் இருந்த 68 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கம் காணாமல்போன சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்குப் பொருட்கள் காணாமல்போன வேளையில் இந்த சந்தேகநபர் பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையின் பாதுகாவலராக கடமையாற்றியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



