பாராளுமன்றத்திற்கு அருகில் பதற்றம்: பெருந்திரளான பிக்குகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
#SriLanka
#Sri Lanka President
#Parliament
#Protest
#Tamilnews
#sri lanka tamil news
#Ranil wickremesinghe
#Lanka4
Mayoorikka
2 years ago

பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பாராளுமன்றத்துக்கு அருகில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு எதிராகவே பௌத்த மதகுருமார்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
பெரே அடிக்கப்படுகின்றது. ‘இது எங்களுடைய நாடு காணியை யாருக்கும் கொடுக்கமாட்டோம்’ என்ற எழுதப்பட்ட பதாகையை தாங்கியவாறே முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாறுகினார்.
இதன்போது அங்கு சற்று பதற்ற நிலைமை உருவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



