சுதந்திர விழாவிற்கு அரசாங்கம் செலவழித்த தொகை பற்றிய வெளியான தகவல்
#Independence
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Tamilnews
Prathees
2 years ago

75 ஆவது சுதந்திர தின விழாவின் உத்தியோகபூர்வ அரச வைபவத்துக்கான செலவு ஒரு கோடியே பதினோரு இலட்சத்து 30,011.29 ருபாய் மட்டுமே செலவிடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த உத்தியோகபூர்வ நிகழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரவி வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக சுதந்திரக் கொண்டாட்டங்களின் உத்தியோகபூர்வ அரச விழாவை நடத்துவதைப் புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட குறுகிய அரசியல் செயல்முறையின் மற்றொரு நீட்சியே இந்தப் பொய்யான தகவலைப் பரப்புவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



