செல்ஃபி மோகத்தில் நடந்த விபரீதம் - அப்பா -பிள்ளை பலி
#Death
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Tamil
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
பொலநறுவை. புளஸ்திபுர, கும்புக்கனறுவ ஓயாவில் இன்று செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து ஆண் ஒருவரும் அவரது 12 வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கும்புக்கனறுவ ஓயாவை பார்வையிடச் சென்ற 46 வயதுடைய ஒருவரும் அவரது மகளும் கல்வல சந்தி பகுதிக்கு அருகில் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காணாமல் போன தந்தையையும் மகளையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் உட்பட்ட குழுவினர், நீரில் மூழ்கிய தந்தையும் மகளும், ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பரணகம பிரதேசத்தில் பின்னர் உடலங்களாக மீட்டனர்.
உயிரிழந்தவர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தந்தை ஓங்கம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றுவதாகவும் காவல்துறையினர்; தெரிவித்தனர்.



