வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரச வைத்தியர்கள்!
#SriLanka
#sri lanka tamil news
#doctor
#work
#Hospital
#Tamilnews
#strike
#Lanka4
Mayoorikka
2 years ago

கடந்த ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்த வருமான வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 8 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறைக்கு அரசாங்கம் உரிய பதில் அளிக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படுவதாக வைத்தியர் சம்மில் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது என அறிவித்துள்ளனர்.



