துருக்கியில் நிலநடுக்கத்தினால் 4400க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு
#world_news
#Earthquake
#SriLanka
#Lanka4
#Tamil
#sri lanka tamil news
Prabha Praneetha
2 years ago

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்து 372 பேர் உயிரிழந்துள்ளதுடன்,15 ஆயிரத்து 834க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை நிலவரப்படி துருக்கியில் உயிரிழந்துவர்களின் எண்ணிக்கை 2,921 ஆக உயர்ந்துள்ளது என்று துருக்கியின் இடர் முகாமைத்துவ் சேவைகளின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நிலநடுக்கத்தால் இதுவரை 15,834 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரவித்துள்ளார்.



