புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் பலி
#Accident
#Train
#Tamilnews
Prathees
2 years ago

மாத்தறை கம்புருகமுவ பிரதேசத்தில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்புருகமுவ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கம்புருகமுவஇ பொரொல்ல பாதையில் பாதுகாப்பற்ற கடவையில் இன்று பிற்பகல் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.



