சஜித் ஜனாதிபதியானால் திருடர்களை பிடிக்கும் அமைச்சராக நான் இருப்பேன்..: சரத் பொன்சேகா
#Sarath Fonseka
#Samagi Jana Balawegaya
#Lanka4
Prathees
2 years ago

சமகி ஜன பலவேகய அரசாங்கத்தின் கீழ் திருடர்களை பிடிக்கும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தலையீடு இல்லாமல் பணியை செய்ய அனுமதித்தால், பணியை செய்து, மக்கள் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்தும் சூழலை உருவாக்குவேன் என்றார்.
பாணந்துறை நகரில் சமகி ஜன பலவேக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



