உயர் நீதிமன்ற நீதியரசர் உட்பட மூவர் பதவிப்பிரமாணம்!
#SriLanka
#sri lanka tamil news
#Court Order
Mayoorikka
2 years ago

உயர் நீதிமன்ற நீதியரசர் உட்பட மூவர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் நீதியரசர் கே.பி.பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
மேல்நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர்.மரிக்கார், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முப்படைகளின் தளபதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



