யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் கைது!
#SriLanka
#sri lanka tamil news
#Tamilnews
#Tamil Nadu
Mayoorikka
2 years ago

சட்டவிரோதமாக தமிழகத்தில் பிரவேசித்த நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் ; கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அமைந்துள்ள வேட்டைக்காரனிருப்பு எல்லையில் 43 வயதான இவர் சட்டவிரோதமாக கரையில் இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தாம், இலங்கையில் நிலவும் பதற்றமான பொருளாதார நிலைமை காரணமாக சட்டவிரோதமாக, தமிழகத்துக்குள் பிரவேசித்தாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடு;த்து உள்ளூர் காவல்துறையினர் அவரை கீழையூர் கரையோர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்



