வர்த்தகரின் மரணம் தொடர்பில் இளம் தம்பதியினர் கைது
Prabha Praneetha
2 years ago
கடந்த வாரம் தலங்கம நீச்சல் தடாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸாரால் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்கவின் சடலம் தலங்கம பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அவரது 3 மாடி கட்டிடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
27 வயதுடைய சந்தேகநபர் கடவத்தை பிரதேசத்தில் வைத்து கந்தானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் அவரது 23 வயது மனைவி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.