உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் சபை சட்டத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் - ஜனக ரத்நாயக்க
#SriLanka
#sri lanka tamil news
#Tamilnews
#Lanka4
Kanimoli
2 years ago

ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள், பொதுப்பயன்பாடுகள் சட்டம் மற்றும் மின்சார சபை சட்டத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
ஆணைக்குழு உறுப்பினர்கள் பொதுவாக ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் நியமிக்கப்படுவதாக தலைவர் கூறியுள்ளார்.
ஆணைக்குழு உறுப்பினர்களின் நியமனம் மற்றும் பதவி விலகல் குறித்து பொறுப்பான அமைச்சர் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மின்துறை அமைச்சருக்கு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அதிகாரம் இல்லை, ஏனெனில் ஆணைக்குழு அவரது அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனம் இல்லை. எனவே, அவர் தனது சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்



