வரியைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம் -
#taxes
#SriLanka
#Lanka4
Prabha Praneetha
2 years ago
.png)
அரச - தனியார் துறை ஊழியர்களின் மாதாந்த வருமானத்தைக் கணக்கிடும் போது ஓவ்வொருவரினதும் மாத வருமானத்தை நிதிப் பலனாகக் கருதி அறவிடப்படும் வரியைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஊழியர்களின் சொந்த வீடுகள், வாகனங்கள், எரிபொருள் அல்லது போக்குவரத்து கொடுப்பனவுகள் போன்றவற்றினை கருத்திற்கொண்டு மாதாந்த நிதி பலனாகக் கருதி விதிக்கப்படும் வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தனர்.
தொழில் வல்லுநர்களுக்கு வரி விதிக்கும் போது குறைந்த ஊதியத்தில் இருந்து அறவிடப்படும் வரி சதவீதத்தை குறைக்க அமைச்சரவைக்கு உரிய பரிந்துரைகளை வழங்குமாறு நிதியமைச்சு அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.



