லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
#Litro Gas
#prices
#SriLanka
Prabha Praneetha
2 years ago
.jpg)
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 334 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை 4,743 என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயுவின் விலையில் இன்றைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.



