இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராக செயற்படுகிறது: இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

#India #SriLanka #Independence
Prathees
2 years ago
இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராக செயற்படுகிறது:  இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான பங்காளியாகவும் நம்பகமான நண்பராகவும் செயற்படுகிறது என இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் அவர் கலந்து கொண்ட பின்னர் இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட ட்விட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நட்புமிக்க அண்டை நாடான' இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

முரளீதரன்; கொழும்பில் உள்ள புனித கங்காராமய விஹாரையில் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

இதன்போது பௌத்த மதம் உட்பட இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான நாகரீக உறவுகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!