பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு எதிராக 14 அம்ச குற்றப்பத்திரிகை தாக்கல்
#Electricity Bill
#SriLanka
#Tamilnews
Prasu
2 years ago

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு எதிராக 14 அம்ச குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தயாராகி வருகிறது.
இந்தக் குற்றப்பத்திரிகை நேற்று (03) சட்ட வரைவு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சட்ட வரைவுத் திணைக்களத்தின் சட்டத்தின் பிரகாரம் குற்றப் பத்திரிகையை தயாரித்த பின்னர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அதனை அடுத்த வாரம் 8 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.



