முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கை இன்று கிடைக்கப்பெறும் - ஆசிறி
#Egg
#prices
#SriLanka
#sri lanka tamil news
Prasu
2 years ago

முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) கிடைக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
டெண்டர் நடைமுறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரண்டு இந்திய விநியோகஸ்தர்களுக்கும் இன்றைய தினத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.
அதன்படி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தவுடன், முட்டை இறக்குமதி செய்யும் பணியை உடனடியாக தொடங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.



