சுதந்திர தினத்தன்று போராட்டங்களைத் தடுக்க நீதிமன்றத்தின் தடை உத்தரவு
#Court Order
#Police
#Independence
#Lanka4
Prathees
2 years ago

நாளை 75வது சுதந்திர வைபவம் நடைபெறவுள்ள காலி முகத்துவார பகுதிக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் திலின கமகே இன்று (03) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவர் சங்கங்கள், வெகுஜன அமைப்புக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடை செய்யுமாறு கோட்டை, கொம்பனித்தெரு
மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்கள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.



