ஜனாதிபதியின் ஆலோசகராக ஆஷு மாரசிங்க மீண்டும் நியமனம்
#Sri Lanka President
Prathees
2 years ago
அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஙகில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக தாம் மீண்டும் நியமிக்கப்பட்டதை மாரசிங்க உறுதிப்படுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் வளர்ப்பு நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய காணொளி ஊடகங்களுக்கு கசிந்ததை அடுத்து மாரசிங்க கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வீடியோ எடிட் செய்யப்பட்டதாக மாரசிங்க பின்னர் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.