இன்று முதல் 04 பொருட்களின் விலை குறையும்
#Sathosa
#prices
#SriLanka
#sri lanka tamil news
Prathees
2 years ago

04 வகையான பொருட்களின் விலை இன்று முதல் மேலும் குறைக்கப்படும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 25 ரூபாவினால் குறைக்கப்படும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதன் புதிய விலை 1இ675 ரூபாய்.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி இன்று முதல் நுகர்வோர் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 165 ரூபா விலையில் கொள்வனவு செய்ய முடியும்.
ஒரு கிலோகிராம் உள்ளூர் சிவப்புபச்சை அரிசியின் புதிய விலை 169 ரூபாவாகும். ஒரு கிலோகிராம் சிவப்புபச்சை அரிசியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டமையே இதற்குக் காரணம்.
ஒரு கிலோ கோதுமை மாவும் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை 230 ரூபாவாகும் என லங்கா சதொச மேலும் தெரிவித்துள்ளது.



