இலங்கை மின்சார சபையினால் திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு தாம் அனுமதியளிக்கவில்லை-ஜனக ரத்நாயக்க

#SriLanka #Electricity Bill #power cuts #sri lanka tamil news
Prasu
2 years ago
இலங்கை மின்சார சபையினால் திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு தாம் அனுமதியளிக்கவில்லை-ஜனக ரத்நாயக்க

இலங்கை மின்சார சபையினால் இன்று முன்மொழியப்பட்ட திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு தாம் அனுமதியளிக்கவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று  தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

பெப்ரவரி 17 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்போவதில்லை என்று அவர்; கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், வழமை போன்று இன்றும் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 331,000 இற்கும் அதிகமான மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அறிவிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு அவர்கள் அங்கீகாரம் வழங்கப் போவதில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இந்த காலகட்டத்தில் இதுபோன்ற மின்வெட்டு எதுவும் அங்கீகரிக்கப்படாதது மற்றும் சட்டவிரோதமானது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!