தலாய்லாமாவுக்கு இலங்கை பௌத்த பிக்குகள் விடுத்த அழைப்பினால் முறியவுள்ள சீன இலங்கை உறவு

டிசம்பர் 29-31 திகதிகளில் இந்தியாவில் உள்ள புத்தகாயவுக்கு சென்றிருந்த இலங்கையின் பௌத்த பிக்குகள் தலாய் லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைத்தனர்.
இதனையடுத்து கொழும்பில் உள்ள சீன இராஜதந்திரிகள் மல்வத்து பிரிவின் மகாநாயக்க தேரரை சந்தித்து, தலாய் லாமாவின் இலங்கை பயணத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
தொற்றுநோய் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்கு சீனாவின் உறுதியான ஆதரவை இதன்போது நினைவுபடுத்திய சீன அதிகாரிகள், தலாய் லாமாவின் வருகையைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெ டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.
சீன-இலங்கை வரலாற்று உறவுகள் சேதமடையாமல் பாதுகாக்க இது அவசியம் என்றும் அவர்கள், மல்வத்து மகாநாயகரிடம் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் குறித்த செய்தி தெளிவாக இருந்தது.
தலாய் லாமாவை இலங்கைக்கு வருமாறு விடுத்த அழைப்பை திரும்பப் பெறாவிட்டால் கடனில் சிக்கியுள்ள மற்றும் நம்பியிருக்கும் இலங்கையுடனான சீனாவின் உறவுகள் சேதமடைந்துவிடும் என்பதையே சீன அதிகாரிகள், இதன்போது சுட்டிக்காட்டியதாக தெ டிப்ளொமெட் கூறியுள்ளது.
தலாய் லாமாவை வரவேற்கும் நாடுகளை சீனா தண்டிக்கும் செயற்பாடு முன்னரும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2016. நவம்பரில் திபெத்தியத் தலைவர் மங்கோலியாவுக்குச் சென்றபோது, அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடையை விதித்து சீனா பதிலடி கொடுத்தது.
முன்னதாகவும் தலாய் லாமா விடயத்தில், சீனா, இலங்கைக்கு அழுத்தத்தை கொடுத்ததாக டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.



