இலங்கையில் நாளாந்தம் 46 பேர் இதன் காரணமாக இறக்கின்றனர்! மருந்துகளுக்கும் தட்டுப்பாடு

இலங்கையில் நாளாந்தம் கண்டறியப்படும் 105 புற்றுநோயாளிகளில் 46 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 4 ஆம் திகதியன்று உலக உலக புற்றுநோய் தினம் அனுஸ்டிக்கப்படுவதை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடந்த செய்தி மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 38,229 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டனர். அவர்களில் 16,691 பேர் இந்த மரணமாகினர்.
பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அதேசமயம் ஆண்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
இதேவேளை புற்றுநோயாளிகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்த பணிப்பாளர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக மருந்துகளை கொள்வனவு செய்யும் பொறிமுறையை செயற்படுத்த சுமார் ஆறு மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.



