இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும்: ஐ. நா மனிதவுரிமை பேரவையில் ஆராய்வு
#SriLanka
#UN
#Human
#Human Rights
Mayoorikka
2 years ago

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவின் கூட்டத்தில்,இலங்கையின் மனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவில் ஆராயப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவில், நான்காவது முறையாக இன்று இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.
இதன்போது, இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் ஓரினச் சேர்க்கையை குற்றமாக்குவதை நீக்க வேண்டும் என்றும் பிரித்தானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள்தெரிவித்துள்ளனர்



