ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க பிரதிநிதி விக்டோரியா நூலண்ட்!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#America
Mayoorikka
2 years ago

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, இலங்கை மக்களுக்கான தற்போதைய அமெரிக்க உதவித் திட்டங்கள் மற்றும் அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செழிப்பான மற்றும் பாதுகாப்பான வாழ்வுக்குச் செயற்படுவதற்கான வழிகள் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்தார்.
அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய எதிர்காலம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.



