உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
#Election
#Election Commission
#Gazette
#Lanka4
Kanimoli
2 years ago
ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி, காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.