சூதாட்ட கூடத்தை நடத்தி வந்த நான்கு இராணுவ அதிகாரிகள் உட்பட 15 பேரை கைது செய்த புலத்சிங்கள பொலிஸார்

#SriLanka #Sri Lankan Army #Arrest #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
சூதாட்ட கூடத்தை நடத்தி வந்த நான்கு இராணுவ அதிகாரிகள் உட்பட 15 பேரை கைது செய்த புலத்சிங்கள பொலிஸார்

சூதாட்ட கூடம் ஒன்றைச் சுற்றி வளைத்து நான்கு இராணுவ அதிகாரிகள் உட்பட 15 பேரை கைது செய்ததாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.-

இச் சம்பவம் புலத்சிங்கள ஹல்வத்துர பிரதேசத்தில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூதாட்ட கூடம் நீண்டகாலமாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இயங்கி வருவதாகவும் இரவு வேளைகளில் அப்பகுதி மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் சுற்றித் திரிவதாகவும், இந்த சூதாட்டத்தில் தூர பிரதேசங்களில் இருந்தும் வந்தும் பலர் கலந்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நான்கு இராணுவ அதிகாரிகள் மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் அடங்குவதாகவும், அவர்கள் அனைவரும் இன்று (31) மத்துகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

புலத்சிங்கள பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகேவின் பணிப்புரையின் பேரில் குற்றப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் துலாஞ்சன ஏக்கநாயக்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!