மூலிகைசார் கஞ்சா இறக்குமதிக்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை
Prabha Praneetha
2 years ago

உள்நாட்டுக்கு மூலிகை மருந்துகளை இறக்குமதி செய்யும் போது மூலிகைசார் கஞ்சா இறக்குமதிக்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இதற்குரிய அமைச்சரவை பத்திரம் விரைவில் முன்வைக்கப்படும். இறக்குமதியை கட்டுப்படுத்தி மூலிகை செடிகளை நாட்டில் வளர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும்.



