ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க!
#SriLanka
#Sri Lanka President
#sri lanka tamil news
#United National Party
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தகவல் வெளியிட்டுள்ளார்.
தேர்தலில் அவர் போட்டியிடுவதுடன், அதில் வெற்றிபெற்று 2030 வரை ஜனாதிபதியாக செயற்படுவார் என பாலித ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.