பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மக்கள் அதிக தியாகங்களை செய்ய வேண்டும்: மத்திய வங்கி ஆளுநர்
#Central Bank
#SriLanka
Prathees
2 years ago

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு மேலும் பல தியாகங்களைச் செய்ய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்தால் நாட்டில் நிலையான பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் கட்டியெழுப்ப முடியும் என்றார்.
சில காலமாக பின்பற்றப்பட்டு வரும் தவறான பொருளாதார கொள்கைகளால் தற்போது நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



