கொழும்பில் மீண்டும் அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தால் பதற்றம்
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Colombo
#Protest
#government
Nila
2 years ago

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை எதிர்த்தும், நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடி குறித்தும் இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களால் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு முன்பாக தற்போது இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அத்துடன் அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பெருமளவிலான பொலிஸார் கடமைகளுக்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்த்தாரை பிரயோக வண்டியும் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



