ஹிருணிகா மீதான கடத்தல் வழக்கு ஒத்திவைப்பு

Prabha Praneetha
2 years ago
 ஹிருணிகா மீதான கடத்தல் வழக்கு ஒத்திவைப்பு

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, டிஃபென்டர் மூலம் இளைஞரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழக்கு பெப்ரவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது. எவ்வாறாயினும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, சாட்சியங்களை முன்னெடுப்பதற்கு மேலதிக திகதியை கோரினார்.


இதற்கு முன்னர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பாடசாலை மாணவி ஒருவரை தவிர, கடத்தல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்ற 7 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடத்தல் குற்றச்சாட்டுக்கள் தவிர, தெமட்டகொடையில் கடத்தப்பட்ட அமில பிரியங்கரை அச்சுறுத்தல், தாக்குதல் மற்றும் மிரட்டல் உட்பட 29 குற்றச்சாட்டுகள் ஒன்பது பேருக்கும் எதிராக சட்டமா அதிபரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொடைக்கு கறுப்பு டிபென்டரில் வந்த சிலர் தம்மை கடத்திச் சென்று தாக்கியதாக முறைப்பாட்டாளர் அமில பிரியங்கர குற்றஞ்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!